Posts

கலியுக மெய்யா

 திரைகடல் ஓடி திரவியம் சேர்த்தேன்.    திசைக்கொரு நபராய் உறவினைப் பிரிந்தேன் இரைதனைத் தேடி இறகுகள் இழந்தேன்.    இருப்பதைக் கொண்டு இன்புற மறந்தேன். வரைமுறை இன்றி வாழ்க்கையைக் கழித்தேன்.   வருவதை எதிர்கொள்ள வழியின்றி தவித்தேன். கரைதனைத் தேடும் கலம்போல் மிதந்தேன்.    கலங்கரை விளக்கென உனையே நினைந்தேன்.                           -சிவகுமாரன் சிவா எழுதிய எங்கள் குல தெய்வம் கலியுக மெய்யர் பாடலுடன் என் பதிவுப் பயணம் தொடங்குகிறேன்.